புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசின் நிலைப்பாடு – ராஜித

325 0

நல்லாட்சி அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியல் அமைப்பை தயாரிப்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இந்த விடயத்தை குறிப்பிட்டார்

புதிய அரசியல் யாப்பு தொடர்பில் சர்வஐன வாக்கெடுப்பை நடத்துவதும் அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும்
சிலர் அதனை எதிர்ப்பது எந்தவிதத்திலும் பிரச்சினையாக அமையாது. அரசாங்கம் இதில் வெற்றிபெறும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது உட்பட பல்வேறு விடயங்கள் பற்றி இதன் போது கவனம் செலுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.