சொகுசு ஜீப்பில் இருந்து வர்த்தகரின் சடலம் மீட்பு

196 0

பாணந்துறை, பிங்வத்த பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக பாணந்துறை பின்வத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொகுசு ஜீப்பில் காலி வீதியிலிருந்து கரையோர வீதியை நோக்கி பயணித்த ஜீப் மீது மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சொகுசு ஜீப்பில் பயணித்த வர்த்தகர், ஓட்டுநர் இருக்கையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவரான சம்பத் குதாகொட கடவத்த, கிரில்லவல பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் குறித்த நபர்  கடவத்த பிரதேசத்தில் உள்ள நாட்டு மதுபானசாலை ஒன்றின் உரிமையாளர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும், அவர்களைக் கண்டுபிடிக்க பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர். பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.