QR முறையை ஒழித்து பெற்றோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய திட்டமாம்!

114 0

திர்காலத்தில் QR முறை ஒழிக்கப்படும் அதேவேளை, பெற்றோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாகவும், இருப்பினும் தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

எரிபொருளின் விலையை அதிகரிப்பதற்கு தற்போதைக்கு எந்த தீர்மானமும் இல்லை.  எரிபொருள் விலை அதிகரித்தால் 10 – 15 ரூபா வரையில் மாற்றம் ஏற்படலாம்.

ஆனால், உக்ரைன் – ரஷ்யா யுத்தம் போன்ற உலக நிலைமைகளை தன்னால் கட்டுப்படுத்த முடியாது எனவும், இவ்வாறான நிலையில் விலை எவ்வளவு குறையும் எனவும் கூற முடியாது.

அடுத்த மூன்று மாதங்களில் QR முறை முற்றாக இல்லாதொழிக்கப்படும் எனவும் அதன் பின்னர் வழமை போன்று மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர்  தெரிவித்துள்ளார்.