நெருக்கடியான காலத்திலேயே தேர்தலை எதிர்கொண்டுள்ளோம் – ருவான் விஜேவர்தன

107 0

மிகவும் நெருக்கடியான காலத்திலேயே தேர்தலொன்றுக்கு முகங்கொடுத்துள்ளோம் என்றும் தற்போதைய ஜனாதிபதியை எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் உள்ள10ராட்சிமன்ற தேர்தல் என்பது ஒத்திவைக்கப்பட்டதாகவே கருதவேண்டியுள்ளது.

தற்போதைய நிலைமைகளை அவதானிக்கும்போது மார்ச் 09ஆம் திகதி உள்ள10ராட்சிமன்ற தேர்தல் இடம்பெறும் என்று உறுதிபடக்கூற முடியாது.

மார்ச் 09ஆம் திகதி உள்ள10ராட்சிமன்ற தேர்தல் இடம்பெற்றாலும் இடம்பெறாவிட்டாலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நாம் தேர்தலை எதிர்கொண்டேயாக வேண்டும்.

எனவே வேட்பாளர்கள் தேர்தல் வரும் வரை காத்திருக்காது, தங்களது பணிகளை தற்போதிலிருந்தே முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

நாடு எவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்டு இருக்கின்றது என்பதை யாவரும் அறிவர்.

மிகவும் நெருக்கடியான காலத்திலேயே இவ்வாறான தேர்தலை எதிர்கொள்வதற்கும் நாம் தயாராகியுள்ளோம்.

மக்கள் மிகவும் நெருக்கடிக்கு மத்தியிலேயே வாழ்ந்துக்கொண்டு இருக்கின்றனர்.

விவசாயத்துறையை எடுத்துக்கொண்டால் விவசாயிகள் மிகவும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர்.

பெற்றோர் தங்களது பிள்ளைகளுக்கு பாதணியைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாது நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சில பிரதேசங்களில் மக்கள் மூன்று வேளைகள் உணவை உட்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான நெருக்கடியான சூழலிலேயே நாம் தேர்தலுக்கு தயாராகியுள்ளோம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிக்கவில்லை.

இன்று எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும் முன்னாள் ஜனாதிபதியே நாட்டில் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தினார்.

அவர் ஜனாதிபதி ஆனாவுடன் வரிவிலக்கு செய்தார். இதனால் நாட்டுக்கு வரவேண்டிய வருமானம் இல்லாமல் போனது.