
பிரித்தானியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த ஈழத்து மாணவர் ஷிரோமினி சற்குணராஜா மற்றும் அவரது தாயார், பிரித்தானியாவில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
த கார்டியன் இணையத்தளம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
நேற்றைய தினம் அவர்கள் இருவரும் இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்தனர்.
ஆனால் அவர்களது நாடுகடத்தல் உத்தரவை ரத்து செய்ய கோரி முன்னெடுக்கப்பட்ட கையெழுத்து திரட்டும் போராட்டத்தினால், குறித்த தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் முகாமில் இருந்தும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

