ஹோமாகம பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
பிடிபன சந்தியில் பிக்கு மாணவர்கள் சத்தியாக்கிரகத்தை ஆரம்பிப்பதற்கு தற்காலிக மாடியை அமைக்க முயற்சித்த போது அதனை தடுக்க பொலிஸார் முற்பட்ட போது அங்கு பதற்றநிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, போராட்டக்காரர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

