ஐ.நா மனித உரிமைச்சபை உரையில் நீங்கள் கூறியதெல்லாம் பொய்தானே என முன்வைக்கப்பட்ட தமிழரின் கருத்துக்கு இலங்கையின் வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர பதில் கூறாமல் சென்றுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரின் இரண்டாவது நாள் அமர்வில் இலங்கையின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் மங்கள் சமரவீர இன்று உரையாற்றியிருந்தார்.
இதேவேளை அவரிடம் உரையில் கூறியதெல்லாம் பொய் என மங்களவினை நோக்கி முன்வைக்கப்பட்ட கருத்துக்கு பதில் ஏதும் கூறாமல் அவர் விலகிச்சென்றுள்ளார்.
இக்கருத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான அமைச்சர் மணிவண்ணனின் முன்வைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

