பனாமுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் கஞ்சா தோட்டமொன்று சுற்றிவளைக்கப்பட்டு சந்தேகநபர்கள் இருவர் நேற்று செவ்வாக்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
பனாமுர – தொடவத்த கந்த பிரதேசத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஒரு ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டமொன்று முற்றுகையிட பட்ட போது 26 635 கஞ்சா செடிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 31 மற்றும் 50 வயதுடைய இந்கெட்டிய மற்றும் முல்லேடியாவ பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

