பிரேசிலிற்கு செல்வதற்கு அனுமதிக்காவிட்டால் கொலை செய்துவிடுவேன்

161 0

இந்தோனேசியாவில் சடலமாக மீட்கப்பட்ட கோடீஸ்வர வர்த்தகர் ஒனேஸ் சுபசிங்கவின் பிரேசில் மனைவி தன்னை தனது நாட்டிற்கு செல்ல அனுமதிக்காவிட்டால் சுபசிங்கவை கொலை செய்துவிடப்போவதாக மிரட்டினார் என தகவல் வெளியாகியுள்ளது.

சுபசிங்கவின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண் இதனை தெரிவித்தார் என சிஐடியினர் நீதிமன்றத்தில்  தெரிவித்துள்ளனர்.

என்னால் இலங்கை உணவை உண்ண முடியாது என்னால் இங்கு வாழ முடியாது நான் எனது நாட்டிற்கு திரும்பி செல்லப்போகின்றேன் என்னை போவதற்கு அனுமதிக்காவிட்டால் நான் உன்னை கொலை செய்வேன் என சுபசிங்கவின் மனைவி தெரிவித்தார் என பணிப்பெண் குறிப்பிட்டதாக சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

தனது சகோதரர் பிரேசிலை சேர்ந்த ரொசாலியா சில்வா என்பவரை மணம் முடித்தார் அவர்களிற்கு நான்கு வயதில் பிள்ளை உள்ளது என கொல்லப்பட்ட வர்த்தகரின் சகோதரர் தெரிவித்தார் என சிஐடியினர் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் ரோஸ்மீட் பிளேசில் உள்ள தொடர்மாடியில் வசித்து வந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சுபசிங்கவிற்கும் மனைவிக்கும் இடையில் அடிக்கடி மோதல் இடம்பெற்றது அவர் தனது மனைவியை விவகாரத்து செய்ய திட்டமிட்டிருந்தார் என உறவினர் ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.