தேக்கு மரப்பலகைகளை சூட்சுமமான முறையில் கொண்டு செல்ல முயற்சித்த நால்வர் சிக்கினர்

174 0

நிக்கவரெட்டிய பகுதியிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு தேக்கு மரப்பலகைகளை கடத்திச் சென்ற நால்வர் பொலிஸாரினால் இன்று (21) காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

இவ்வாறு தேக்கு மரப்பலகைகளை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய கரம்பை சோதனைச் சாவடியில் வைத்து வாகனங்ககளை நிறுத்தி சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதன்போது கெப்ரக வண்டியின் பின்பக்கத்தில் உர மூடைக்குள் அடியில் சூட்சுமமான முறையில் தேக்கு மரப்பலகைகளை மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதன்போது நிக்கவரெட்டிய பகுதியைச் சேர்ந்த நால்வர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக இதன்போது பொலிஸார் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட தேக்கு மரப்பலகைகள் சுமார் 10 இலட்சம் ரூபாவிற்கு அதிக பெறுமதியென பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் கைப்பற்றப்பட்ட தேக்கு மரப்பலகைகளையும் கடத்தலுக்கு பயன்படுத்திய கெப்லொறியையும் புத்தளம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுரைச்சோலைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.