மைத்திரிக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்துள்ள தடையுத்தரவு!

196 0

முன்னாள் ஜனாதிபதியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர ஆகியோருக்கு எதிராக  இடைக்கால  தடையுத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த  தடையுத்தரவை கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரணகம இன்று (பெப் 21)  பிறப்பித்துள்ளார்.

ஜா-எல பிரதேச சபையின் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினராக பதவி வகித்த  ஷமாலி பெரேரா என்பவருக்குப்  பதிலாக அந்தப் பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆராய்ந்த கொழும்பு மாவட்ட நீதிமன்றம் புதிய உறுப்பினர் நியமனத்தை  இரத்துச் செய்து இந்த தடைகாலத் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

குறித்த தடையுத்தரவானது  அடுத்த மாதம்  3 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.