போலியான அனுமதிப்பத்திரத்துடன் ட்ரோன் ஒன்றை பறக்கவிட்ட இளைஞர் கொத்தட்டுவவில் கைது!

146 0

பாதுகாப்பு அமைச்சினது அனுமதிப்பத்திரம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் அனுமதிப் பத்திரம் ஆகியவற்றை போலியாக தயாரித்து  ட்ரோன் ஒன்றைப்  பறக்கவிட்ட இளைஞர் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தகவலின்படி, கொத்தட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் 25 வயதுடைய இளைஞரே  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர்  அடிக்கடி ட்ரோன்களைப் பறக்கவிட்டு பல்வேறு புகைப்படங்களை எடுப்பதாகவும் அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது போலி ஆவணங்களை காட்டி பொலிஸாரை தவறாக வழிநடத்தியதாகவும்  கூறப்படுகிறது.