ஐ.எம்.எவ் நிதியுதவியின் தாமதத்துக்கு காரணம் சீனாவே!!- விஜயதாஸ

257 0

சீனாவிடமிருந்து சாதகமான பதில் கிடைப்பது தாமதமாவதால் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவியை பெற்றுக் கொள்வதில் தடைகள்
ஏற்பட்டுள்ளன என நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் குறித்து சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை ஏற்படுவதற்கு இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி அவசியம்.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை இலங்கை நாடவேண்டும் என 2021லேயே யோசனைகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

ஆனால், அந்தச்சமயம் மத்திய வங்கியின் ஆளுநராக பணியாற்றியவர் அதனை ஏற்க மறுத்ததால் அது தாமதமானது என அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.