ஆறு பேர் சட்டவாக்க நிலையியற் குழுவின் உறுப்பினர்களாக தெரிவு

161 0

பாராளுமன்ற  உறுப்பினர்களான பைசல் காசிம்,கோவிந்தன் கருணாகரம்,இம்ரான் மஹ்ரூப் உள்ளடங்களாக ஆறு பேர் சட்டவாக்க நிலையியற் குழுவின் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற நிலையியற் கட்டளை  113 இன் ஏற்பாடுகள் மற்றும் கடந்த 10 ஆம் திகதி (பெப்ரவரி) பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  பிரேரணை என்பனவற்றிற்கு அமைவாக பிரதிச் சபாநாயகரை தலைவராக கொண்ட சட்டவாக்க நிலையியற் குழுவில்  பணியாற்றுவதற்காக தெரிவு செய்யப்பட்ட  உறுப்பினர்களின் பெயர் விபரத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சபைக்கு அறிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு அறிவிப்பு விடுக்கப்பட்டது.

இதற்கமைய பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன,பைசல் காசிம்,அஜித் மான்னப்பெரும,கெவிந்து குமாரதுங்க,கோவிந்தன் கருணாகரம் இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் சட்டவாக்க நிலையியற் குழு உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.