ஆரணி ஆதிதிராவிட மாணவர் விடுதியை தரத்துடன் விரைவாக கட்டி முடிக்க மாணவர்கள் கோரிக்கை

231 0

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி மொத்த காய்கறி மார்க்கெட் அருகே ஆதிதிராவிட மாணவர் விடுதி ஒன்று தாட்கோ நிதி உதவியுடன் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் கட்டி முடிக்க பணியானை வழங்கப்பட்டது. மூன்று அடுக்குகளுடன் 12 அறைகள் கொண்ட இக்கட்டிடம் கட்டும் பணி கடந்த ஒரு ஆண்டாக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது.

மேலும், தரமற்ற சிமெண்ட், கல் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி கட்டிடத்தை கட்டி வருவதாக மாணவர்களும், பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பணி நடைபெறும் இடத்தில் என்ன? பணி நடைபெறுகிறது. எவ்வளவு? தொகையில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. எந்த? நிதியில் இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. எப்பொழுது? பணியை துவங்கி எப்பொழுது? பணி முடிவடையும் என்ற அறிவிப்பு பலகையும் அமைக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் இப்பணியின் தரத்தை ஆய்வு செய்து விரைவாகவும், தரமாகவும் கட்டிடத்தை கட்டி முடிக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.