பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால்…..

342 0

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்களின் காணிகள் நில அளவை திணைக்கள அதிகாரிகளினால் இன்று காலை அளவீடு செய்யப்பட்டுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் தெரிவித்துள்ளார்.

நிலமீட்புக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பிலவுக்குடியிருப்பு மக்களுக்குச் சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ள நிலையிலேயே காணிகள் அளவீடு செய்யப்பட்டுள்ளன.

விமானப் படையினரிடமுள்ள மக்களின் சொந்த காணிகள் விடுவிக்கப்படும் அதேவேளை, தற்காலிகமாக வழங்கப்பட்ட மாதிரிக் கிராமம் அரசாங்கத்தால் மீளப்பெறப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.