இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்துக்கு சிஷெல்ஸ் உதவி!

338 0

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்துக்கு சிஷெல்ஸ் ஜனாதிபதி டேனி பவூரே தனது நாட்டின் ஒத்துழைப்பை வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீஷேல்ஸ் ஜனாதிபதி டேனி பவூரே ஜனாதிபதியை சந்தித்தது பேச்சுவார்த்தை நடத்தியபோதே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போதைப்பொருள் தடுப்புக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுக்கும் செயற்திட்டங்களை இதன்போது பாராட்டியுள்ள சீஷேல்ஸ் ஜனாதிபதி,

இரகசிய புலனாய்வு தகவல்களை பரிமாறுதல் போன்ற துறைகள் ஊடாக வழங்கக்கூடிய ஒத்துழைப்புகளை வழங்குவதாகவும் கூறியுள்ளார்.

போதைப்பொருளுக்கு எதிரான போராட்டத்துக்கு இவ்வாறான நட்பு நாட்டின் ஒத்துழைப்பு கிடைப்பது தொடர்பில் மகிழ்ச்சியை வெளியிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,

தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ள போதைப்பொருள் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அனைத்து நட்பு நாடுகளும் கைகோர்க்க வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.