தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் உயிரிழப்பு

222 0

அங்குலான பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நேற்று (19) மாலை தாக்குதலுக்கு இலக்காகி 27 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

அங்குலான, சாந்த சேவியர் மஸ்ஜித் அருகில் குழுவொன்றின் தாக்குதலுக்கு இலக்காகிய  குறித்த  நபர்  லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 27 வயதுடைய அங்குலான, மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார். குறித்த  நபர் அவரது மாமனாரின்  வீட்டிற்கு வருகை தந்திருந்த போது இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இதன் போது காயமடைந்த மாமாவும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குழுவொன்றுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அங்குலான பொலிஸார் தெரிவித்தனர்.