வடமாகாண கல்விஅமைச்சின் நேர்முகத்தேர்வில் சித்தியடைந்தோருக்கு நியமனம் வழங்கப்படவுள்ளது – இ.இரவீந்திரன்

278 0
வட மாகாண கல்வி அமைச்சின் நேர்முகத் தேர்வில் சித்தி எய்திய 559பேருக்கும் 28ம் திகதி  கூட்டத்தின் பிற்பாடு நியமனம் வழங்கப்படுவதோடு ஏனையவர்கள் தொடர்பினில் கூட்டத்தீர்மானத்திற்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இரவீந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவிக்கையில் ,
வட மாகாண கல்வி அமைச்சின் தேர்முகத் தேர்வில் சித்தி எய்தி 559பேருக்கும் 28ம் திகதிய கூட்டத்தின் பிற்பாடு ஓர் குறித்த திகதியில்  நியமனம் வழங்கப்படுவதோடு ஏனையவர்கள் தொடர்பினில் கூட்டத்திர்மானத்திற்கமைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஏனெனில் குறித்த தேர்முக்த் தேர்வில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் அதில் உள்ள பாட முறமைகள் தொடர்பிலும் அதற்கான பொருத்தப்பாடுகள் தொடர்பிலும் 28ம் திகதிய கல்விக் குழுக் கூட்டத்தின்போது விரிவாக தெரிவிக்கப்படும்.
அவ்வாறு தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பினில் குழுவும் ஆராயும் எனவே அதன் நியாயப்பாடுகளையும் தரத்தினையும் அவர்களும் பரீட்சித்த பின்பு அதற்கான அனுமதி கிடைக்கும் . அத்தோடு நியமனம் வழங்கப்படும் 559 ஆசிரியர்களிற்கான நியமனமும் அண்மையில் வழங்கப்பட்ட சிங்கள பாட ஆசிரியர்களின் எண்ணிக்கையுடன் சுமார் 650 பேருக்கான நியமனம் வழங்கப்படுகின்றது.
இதேவேளை வட மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு 1800 ஆசிரியர்களிற்கான அனுமதி கோரியிருந்தபோதிலும் ஆயிரம்பேருக்கான அனுமதி கிடைத்திருந்த்து. இவ்வாறு கிடைத்த ஆயிரம் ஆசிரியர்களில் எஞ்சிய தொகையான 350 பேரின் நியமனம் தொடர்பிலும் 28ம் திகதிய கூட்டத்திலேயே தீர்மானிக்கப்படும்.
அவ்வாறு தீர்மானிக்கப்படும் வழிமுறையில் எஞ்சிய 350 பேருக்கான நியமனங களும் அடுத்த கட்டமாக விரைவினில் வழங்க ஆவண செய்யப்படும் அதேவேளை 2016ல் மத்திய அரசிடம் பெற்ற அனுமதிக்கான ஆயிரம் ஆசிரியர்களிற்கான நியமனத்தினையும் வழங்கி நிறைவு செய்யும் பட்சத்தில் எம்மால் கோரிய எஞ்சி 800 ஆசிரயர்களின் நியமனத்திற்கான அனுமதியை பெற்றுக்கொள்ளப்படும் என்றார்.