உலக பாரம்பரிய சின்ன பட்டியலில் சிக்கிம் தேசிய பூங்கா

446 0

201607180531183746_Nalanda-University-three-more-Indian-sites-make-it-to-Unesco_SECVPFசண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டிடம், சிக்கிம் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ளது.

உலக அளவில் மிகவும் பழமையானதும், கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மிக்கதுமான இடங்களை யுனெஸ்கோ அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. புகழ்பெற்ற இந்த பட்டியலில் இந்தியாவின் குதுப்மினார், மகாபோதி கோவில், ஊட்டி மலை ரெயில் உள்ளிட்ட பல்வேறு கலாசார சின்னங்கள் இடம் பெற்று உள்ளன. தற்போது இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த மேலும் 3 இடங்கள் புதிதாக இணைக்கப்பட்டு உள்ளன.

சண்டிகார் நகரில் உள்ள சட்டசபை கட்டிடம், சிக்கிம் கஞ்சன்ஜங்கா தேசிய பூங்கா, நாலந்தா பல்கலைக்கழகம் ஆகிய பகுதிகளை உலக பாரம்பரிய சின்னங்களாக யுனெஸ்கோ அங்கீகரித்து உள்ளது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நேற்று நடந்த உலக பாரம்பரியக்குழுவின் 40-வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

அரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் தலைநகராக விளங்கும் சண்டிகாரில் உள்ள சட்டசபை கட்டிடம் புகழ்பெற்ற சிற்பி லி கொர்பசியரின் கைவண்ணத்துக்காக இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. இதைப்போல உலகிலேயே 3-வது உயரமான கஞ்சன்ஜங்கா சிகரத்தை உள்ளடக்கிய சிக்கிம் தேசிய பூங்கா பள்ளத்தாக்கு, பனிப்பாறைகள், ஏரிகள் என இயற்கை எழில் கொஞ்சும் பிரதேசமாகும். பீகாரில் உள்ள நாலந்தா பல்கலைக்கழகம் கி.பி.5-ம் நூற்றாண்டை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.