சென்னையில் பரவலாக மழை

598 0

201607181025545614_heat-wave-Chennai-rain-Meteorological-officer-information_SECVPF (1)வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. இன்று இரவும் இடி-மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறினார்.

தென்மேற்கு பருவ மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், தென் மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.குற்றாலம், தென்காசி, பகுதிகளில் சாரல் மழை இதமாக உள்ளது. சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை பொறுத்தவரை வறண்ட வானிலையே காணப்படுகிறது. வெப்ப சலனம் உருவாகி அதன் காரணமாக சில இடங்களில் இரவில் மழை பெய்கிறது.இதே போல் நேற்று இரவில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்தது. குளிர்ச்சியான காற்றும் வீசியது.

கோயம்பேடு, அம்பத்தூர், ஆவடி, திருவள்ளூர், சோழவரம், பூண்டி, மீனம்பாக்கம், தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.சென்னை விமான நிலையத்தில் 35.6 மி.மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 1.5 மி.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 22 மி.மீட்டர் மழையும், பூண்டியில் 3.40 மி.மீட்டரும், அம்பத்தூர், சோழவரத்தில் 1 மி.மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது.இதுபற்றி வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறியதாவது:-வெப்ப சலனம் காரணமாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் நேற்றிரவு பரவலாக மழை பெய்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் 1 மணி நேரம் கன மழை பெய்தது. சென்னையில் இன்று இரவும் இடி-மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.