இந்தியா-இங்கிலாந்து இடையே கலாச்சார ஆண்டு வரவேற்பு விழா: ஜேட்லி, கமல் பங்கேற்பு

227 0

இந்தியா-இங்கிலாந்து 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இங்கிலாந்த ராணி இரண்டாம் எலிசபெத் துவக்கிவைக்கிறார். இந்த நிகழச்சியில் இந்தியா சார்பில் ஜேட்லி, கமல், கபில்தேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்பு.

இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2017 கலாச்சார ஆண்டு வரவேற்பு விழாவை இன்று மாலை இங்கிலாந்து ராணி இராண்டாம் எலிசபெத் துவக்கி வைக்கிறார். லண்டனில் உள்ள பக்கிங்காம் அரண்மைனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் இந்த கலாச்சார விழாவை ராணி துவக்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இந்தியா சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, உலகநாயகன் கமல்ஹாசன், சுரேஷ் கோபி, கிரிக்கெட் பிரபலம் கபில் தேவ், பாடகரும் நடிகருமான குர்தாஸ் மன், ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் ஆரோரா, மணீஷ் மல்கோத்ரா மற்றும் அனோஷ்கா ஷங்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், பிரதமர் மோடி தனது பெயரை முன்மொழிந்ததை மிகப் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன் என்றார். இந்தியா-இங்கிலாந்து இடையேயான வரலாற்றை, கலாச்சார விழாவாக கொண்டாடும் இந்த தருணம் மிகச்சிறந்தது. இந்தியாவில் உள்ள பல மொழிகளை இணைக்கும் பாலமாக ஆங்கிலம் இருப்பது சிறப்பான ஒன்று என்றும் கமல் தெரிவித்தார்.

இந்தியா-இங்கிலாந்த இடையே நடைபெறும் இந்த கலாச்சார அணிவகுப்பு விழாக்கள் மேன்மேலும் தொடர வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்தார்.

மேலும் இருநாடுகளின் ஒற்றுமைக்கு ஆதரமாக வரும் ஜுன் மாதம் இந்தியா-இங்கிலாந்து இடையே சிறப்பு கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைக்க இங்கிலாந்துக்கான, இந்தியாவின் உயர் கமிஷனர் ஒய்.கே.சின்ஹா விடுத்த அழைப்பை கபில்தேவ் ஏற்றார்.

இந்த கலாச்சார விழாவில் 90 வயதான இங்கிலாந்து ராணி, டியூக் ஆப் எடின்பர்க், இளவரசர் பிலிப், மற்றும் பேரன் இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

மேலும் முக்கிய அதிகாரிகளுக்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் கலாச்சார அணிவகுப்பில் இந்தியாவின் கலாச்சார நடனங்கள், பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.