சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கடையில் மோதிய பஸ்

166 0

மின்னேரிய பஸ்  நிலையத்திலிருந்து ஹிங்குராக்கொட நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று  விபத்துக்குள்ளான சம்பவம் இன்று (13) காலை இடம்பெற்றுள்ளது.    பஸ்ஸின் சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பே  விபத்துக்குக் காரணம் என தெரிய வந்துள்ளது.

வீதியில் சென்று கொண்டிருந்த பஸ்  திடீரென  வீதியை   விட்டு விலகி கடை ஒன்றின் மீது மோதிய காட்சிகள்  அங்கிருந்த  சிசிரிவி  கமெராவில் பதிவாகியுள்ளது.

மாரடைப்புக்குள்ளான  குறித்த பஸ்ஸின் சாரதி   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில்  அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிய வந்ததுள்ளது. 75 வயதான என்.கே. ஆரியரத்ன என்ற சாரதியே  மரணமானவராவார்.