பிரபல போதைப்பொருள் வியாபாரி ‘குடு சுமங்கலி’ கிராண்ட்பாஸில் கைது!

98 0

கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதியில் பிரபல போதைப்பொருள் வியாபாரியான ‘குடு சுமங்கலி’ என்ற பெண் 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கிராண்ட்பாஸ் மஹவத்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 200 கிராம் 80 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டது.

இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.