ஜனாதிபதியின் அக்கிராசன மோகத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தை பயன்படுத்த முடியாது!

76 0

அக்கிராசன மோகத்தில் உள்ள ஜனாதிபதிக்கு பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டு மக்கள் சார்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினோம்.

ஜனாதிபதியின் அக்கிராசன மோகத்தை நிறைவேற்ற பாராளுமன்றத்தை பயன்படுத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (8) இடம்பெற்ற ஜனாதிபதியின் அக்கிராசன உரையை பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் 36 உறுப்பினர்கள் புறக்கணித்தார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பராளுமன்ற சபைக்குள் நுழைந்தவுடன் 36 உறுப்பினர்களும் ஜனாதிபதியை நோக்கி சிரித்தவாறு’ ‘அக்கிராசன மோகம்’ என குறிப்பிட்டுக் கொண்டு வெளியேறினார்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குறிப்பிட்டதாவது,

அரச செலவுகளை மட்டுப்படுத்த வேண்டும் என குறிப்பிடும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தை தனது தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்கிறார்.

பாராளுமன்ற  கூட்டத்தொடர ஒத்திவைத்து அக்கிராசன உரை ஆற்றும் ஜனாதிபதியின் மோகத்திற்கு நாட்டு மக்கள் சார்பில் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளோம்.

மக்களாணை இல்லாத ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவிக்கு வந்து ஆறு மாத காலத்திற்குள் பாராளுமன்ற கூட்டத்தொடரை இரு முறை ஒத்திவைத்தார்.

கலைக்கப்பட்ட பாராளுமன்ற சிறப்பு குழுக்களை மீண்டும் நியமிக்க பல மாதங்கள் செல்லும், ஆளும் மற்றும் எதிர்தரப்பிற்குள் முரண்பாடுகள் தோற்றம் பெறும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கை உரையில் புதிய விடயம் ஏதும் குறிப்பிடவில்லை. பாராளுமன்றத்தின் காலததையும், நிதியையும் வீணடிக்கும் செயற்பாட்டுக்கு பங்காளியாக முடியாது என்பதால் அவரது அக்கிராசன உரை நிகழ்வை புறக்கணித்தோம் என்றார்.