பரந்தன் வீதியில் நெல் உலர விடப்பட்டமையால் விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு!

95 0

பரந்தன் – பூநகரி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பூநகரி கௌதாரி முனைப் பகுதியை சேர்ந்த க.றேகன் (வயது 35) என்பவரே உயிரிழந்துள்ளார்.

வீதியில் நெல் பரவி உலர விட்டிருந்தமையால், வீதியின் வலது பக்கத்தால் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது எதிரே வந்த பட்டா ரக வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்.

விவசாயிகள் நெல்லை பரவி உலர விட நெல் மேடைகள் போதியளவில் இல்லாதமையால் வீதிகளில் நெல்லை உலர விட்டு வருகின்றனர்.

வீதிகளில் நெல்லை உலர விடுவதானல் விபத்துக்கள் இடம்பெறுவதாக பலரும் சுட்டிக்காட்டி வந்த நிலையிலும், நெல்லை உலர விட வேறு இடவசதிகள் இல்லாதமையாலையே தாம் வீதிகளில் நெல்லை உலர விடுவதாக விவசாயிகள் கூறி வருகின்றனர்.