நீதிமன்றத்தை நாடும் தேர்தல்கள் ஆணைக்குழு?

67 0
தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உள்ளூராட்சி அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, தேர்தலுக்கான அடிப்படை செலவினங்களுக்காக திறைசேரி செயலாளரிடம் 770 மில்லியன் ரூபா கோரப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க அச்சகத் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், தபால் திணைக்களம் உள்ளிட்ட தேர்தலின் போது பூர்வாங்க பணிகளை மேற்கொள்ளும் நிறுவனங்களுக்கு முன்பணமாக வழங்குவதற்காக இந்தத் தொகை கோரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இது தொடர்பான பணத்தை வழங்குவது தொடர்பில் திறைசேரி செயலாளர் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 9 ஆம் திகதி நீதிமன்றில் கருத்து தெரிவிக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.