முல்லைத்தீவில் 75 பயனாளிகளுக்கு காணி மீள் அளிப்பு பத்திரங்கள் கையளிப்பு

113 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட 75 பயனாளிகளுக்கு 75வது சுதந்திர தினத்தில் காணி மீள்  அளிப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இலங்கையின் 75 ஆவது சுதந்திரதின நிகழ்வை கொண்டாடும் முகமாக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு காணி மீள்  அளிப்பு பத்திரங்கள் வழங்கப் பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் 4 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசசெயலகத்திற்குட்பட்ட 75 குடும்பங்களுக்கு காணி மீள்  அளிப்பு பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்.க.கனகேஸ்வரன் (நிர்வாகம்), மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர். எஸ். குணபாலன் (காணி), உதவி மாவட்ட செயலாளர் லிசோ கேகிதா, மாவட்ட உள்ளகக் கணக்காய்வாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், உலக உணவுத்திட்ட மாவட்ட பணிப்பாளர், கமநல அபிவிருத்தி

திணைக்களத்தின் உதவி ஆணையாளர், மாவட்ட காணி பயன்பாட்டு திட்டமில் கிளையின் உதவிப்பணிப்பாளர், மாவட்ட நிர்வாக உத்தியோகத்தர், புதுக்குடியிருப்பு பிரதேச உதவிப்பிரதேச செயலாளர் மற்றும் உதவித்திட்டமிடல் பணிப்பாளர், பதவிநிலை உத்தியோகத்தர்கள், ஏனைய உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள், மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.