விக்ஸ் காட்டுப் பகுதி மக்கள், 6ஆவது நாளாக தொடர்ந்தும் போராட்டத்தில்(காணொளி)

268 0

வவுனியா விக்ஸ் காட்டுப் பகுதி மக்கள், 6ஆவது நாளாக தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வவுனியா – இராசேந்திர குளம் கிரமசேவகர் பிரிவிற்குட்பட்ட விக்ஸ் காட்டில் குடியிருக்கும் மக்கள் தங்களது நிலங்களை பெற்றுதருமாறு கோரி வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக தொடர்ந்து 6ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

தாம் வாழும் காணிகளையே தமக்கு வழங்க வேண்டும் எனக் கோரி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றுடன் ஆறாவது நாளாக முற்றுகைப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்கள்.

இத்தொடர் போராட்டத்தில் சிறுவர்கள், முதியவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இராசேந்திரம் குளம் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில், வவுனியா அரசாங்க அதிபரினால் இனங்காணப்பட்ட பகுதியில்,

47 குடும்பங்களுக்கும் காணி பகிர்ந்தளிக்கப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும்,

மூன்று மாத கால அவகாசத்தின் பின்னர் அக்காணியினை வன இலகா திணைக்களமிடமிருந்து பெற்றுத் தருவதாகவும், அதுவரையில் ஒதுக்கப்பட்ட பகுதியில் குடியிருக்குமாறும்,

வன இலகா அதிகாரிகளால் எவ்வித இடையூறும் எற்படாது எனவும் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாக்குறுதியளித்திருந்த போதிலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அதனை ஏற்க மறுத்துள்ளனர்.

அத்துடன் தாங்கள் பல தடவை இவ்வாறு ஏமாற்றப்பட்டதாகவும், அரசாங்க அதிபர் எழுத்து மூலம் உறுதிமொழி வழங்குமிடத்து, கால அவகாசம் வழங்க தயாராக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.