பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் நிகழ்வு.

78 0
பிரான்சில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாளாகக் கொள்ளும் நிகழ்வு இன்று 04.02.2023 சனிக்கிழமை 15.00 மணி தொடக்கம் 17.00 மணிவரை Place de La Republique பகுதியில் இடம்பெற்றது.பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மற்றும் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன், பிரெஞ்சு மொழியிலான ஊடக அறிக்கை வாசித்தளிக்கப்பட்டது.
பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் சிறிலங்கா அரசின் சுதந்திர நாளை நாம் ஏன் கரிநாளாகக் கடைப்பிடிக்கவேண்டும் என்பதன் நோக்கம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.பல வெளிநாட்டவர்களும் குறித்த போராட்டம் தொடர்பில் அறிந்து கொண்டனர்.பிரான்சில் இன்று சீரற்ற காலநிலை நிலவுகின்ற போதும் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.
(படங்கள்: யூட், வினுயன்)
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)