சிங்கள பயங்கரவாத அரசின் 75ஆவது சுதந்திர தினம் ஈழத்தமிழர்களின் 75ஆவது கரிநாள்-Frankfurt.

132 0

04.02.2023 அன்று சிங்கள பயங்கரவாத அரசின் 75ஆவது சுதந்திர தினத்தை ஈழத்தமிழர்களின் கரிநாளாக உலகெங்கும் பரவி வாழும் ஈழத்தமிழர்கள் உணர்வுப்பூர்வமாக கடைப்பிடித்து வருகின்றனர்.அதனடிப்படையில் யேர்மன் நாட்டில் உள்ள பிராங்போர்ட் (Frankfurt) நகரில் தமிழர்களால் 14:30 மணிக்கு அகவணக்கத்துடன் கண்டன ஆர்ப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் வேற்றின மக்களும் கலந்துக் கொண்டு சிங்கள பயங்கரவாத அரசை கண்டித்தார்கள்.பல இளையோர்களும் இவ் கண்டன ஆர்ப்பாட்டத்தில் இணைந்து கொண்டார்கள். யேர்மன் மொழியிலான துண்டுப்பிரசுரங்கள் வேற்றின மக்களுக்கு அளிக்கப்பட்டதுடன் தமிழினவழிப்பு தொடர்பாக விளங்கப்படுத்தப்பட்டது.

இறுதியாக தமிழர்கள் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைக்காக போராட வேண்டும் என்ற உறுதியுடன் தமிழரின் தாரக மந்திரத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.