மாகாண சபைகளும் பிரிவினைவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த தடை –ரணில்

227 0
அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் நாட்டை பிரிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் அல்ல என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொடிகாவத்தையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டே போதே பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பகிர்வு தொடர்பில் மூன்று விடயங்களின் அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
இதன்கீழ் எந்த மாகாண சபைகளும் பிரிவினைவாதம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தடை விதிக்கப்படும்.
அடுத்ததாக காவற்துறை மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.
மேலும் மாகாண சபைகளுக்கும் மத்திய அரசாங்கத்துக்கும் இடையிலான அதிகார மோதல்கள் இடம்பெறாதவண்ணம் தெளிவான அதிகாரப் பகிர்வு குறித்து பேசப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக செனட் சபை ஒன்றின் உருவாக்கும் குறித்தும் அவதானம் செலுத்தப்படுகிறது.
இவை எவையும் நாட்டை பிளவுப்படுத்தும் விடயங்கள் இல்லை என்று பிரதமர் கூறியுள்ளார்.