S.G சாந்தனின் மறைவு செய்தியை ஒளிபரப்பு செய்த டான் ரீவி முகாமையாளர் அரச புலனாய்வாளரகளால் மிரட்டப்பட்டார்

204 0
நோய்த்தாக்கத்திற்குள்ளாகி சாவடைந்த தமிழீழ விடுதலை புலிகளின் முன்னணி பாடகர் S.G சாந்தனின் மறைவு சம்பந்த மாக  யாழில் செயற்பட்டுவரும் டான் தொலைக்காட்சி சிறப்பான ஒளிபரப்பினை மேற்கொண்டிருந்தது.இதனை காரணம் காட்டி அரச புலனாய்வாளர்கள் டான் தொலைக்காட்சியின் முகாமையாளரும் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஊடக இணைப்பாளருமான வேலாயுதம் தயாநிதி(தயாமாஸ்ரர்) யை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அரச புலனாய்வாளர்கள் மிரட்டியுள்ளார்கள். திருப்பவும் உள்ள அனுப்புவம்,  தூக்குவம் போன்ற வார்த்தைகளால் மிரட்டியுள்ளார்கள்.
எனினும் மறைந்த s.G சாந்தன் விடுதலை புலிகள் அமைப்பின் முண்ணணி பாடகர் மட்டுமே அவர்  தமிழீழ விடுதலை புலி உறுப்பினர் அல்ல.அத்துடன் சாந்தன் 2011 ம் ஆண்டு சாந்தன்  புனர்வாழ்வு முகாமில்  புனர்வாழ்வு பெற்று வந்த  சமயம் முதல் முதல் புனர்வாழ்வு முகாமில் இருந்து வெளியே வந்து இசை குழு ஒன்றில் பாட களம் அமைத்துக்கொடுத்த பெருமை டான் ரீவீ இயக்குனர் s.s  குகநாதன் அவர்களை மட்டுமே சாரும்.அத்தோடு சாந்தன் விடுதலையாகி வெளியில் வந்த பின்னரும் டான் ரீவியில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் s.g சாந்தன் தனது கலைத்திறமையை வெளிப்படுத்தியிருந்தமை அனைவரும் அறிந்ததே.கடந்த வருடம் இடம்பெற்ற டான் ரீவியின் இந்து சனலாகிய ஓம் ரீவியின் 5ம் ஆண்டு நிறைவு நிகழ்விலும் சாந்தன் தனது குரல் திறமையை நிகழ்வில் இடம்பெற்ற  இசை நிகழ்வு மூலம் வெளிப்படுத்தியிருதந்தார்.
இதே போல் டான் ரீவிக்கும் மறைந்த s.g  சாந்தனுக்கும் இடையில் அவரது கலைத்திறமை காரணமாக பல நெருக்கமான உறவு இருந்து வந்தது இதன் காரணமாக தான் டான் தொலைக்காட்சி அவரது இறப்பை ஒரு கலைஞனின் இறப்பிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தினை கொடுத்து நேற்றைய தினம் திறம்பட  செய்தியை  ஒளிபரப்பியது.எனினும் நேற்று இரவு டான்  தொலைக்காட்சியின் முகாமையாளர் தயாமாஸ்ரர்  அரச புலனாய்வாளர்களால் மிரட்டப்பட்டமை கண்டிக்கத்தக்கது.