பாலியல் வன்முறை செய்தி – பத்திரிகையாளர் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை

150 0

பாலியல் வன்முறை  குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை கைதுசெய்யப்பட்ட இந்திய பத்திரிகையாளர் சித்தீக் கப்பன் இரண்டு வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் தலித்யுவதியொருவர் நான்கு உயர்சாதி ஆண்களால் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டமை குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை 2020ம் ஆண்டு சித்தீக் கப்பன் கைதுசெய்யப்பட்டார்.

இந்தியாவில் ஆர்ப்பாட்டஙகளிற்கு வழிவகுத்த பாலியல் வன்முறைசம்பவம் குறித்து செய்தி சேகரிக்க சென்றவேளை அவர் கைதுசெய்யப்பட்டார்.

 

பத்திரிகையாளர்சட்டமொழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த முயன்றார் வன்முறையை தூண்டினார் என  பொலிஸார் குற்றம்சாட்டியிருந்தனர்.

அவருடன் காரில் இருந்த வேறு மூன்று பத்திரிகையாளர்களிற்கு எதிராகவும் காவல்துறையினர் குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தனர்.

சில மாதங்களிற்கு முன்னர் நீதிமன்றம் பத்திரிகையாளரை பிணையில் விடுதலை செய்துள்ள போதிலும் இன்றே அவர் விடுதலையானார்.

தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நான் தொடர்ந்தும் பத்திரிகையாளனாக செயற்படுவேன் நான் ஒரு பத்திரிகையாளன் நான் எப்படி எதுவும் செய்யாமலிருக்க முடியும் என அவர்கேள்வி எழுப்பியுள்ளார்.

மலையாள ஊடகமொன்றிற்காக பணியாற்றிக்கொண்டிருந்தவேளையே கப்பன் கைதுசெய்யப்பட்டார்.

பொலிஸார் தன்னை உடல்உளவியல் ரீதியில் சித்திரவதை செய்தனர் என அவர் குற்றம்சாட்டியிருந்தார்.