கட்சிக்குள் பிளவை ஏற்படுத்துவோர் மக்களை பிளவுபடுதுகிறார்கள்

167 0

கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கை தமிழரசு கட்சிக்குள் இருந்து பிளவு ஏற்படுத்துபவர்கள் மக்களை பிளவுபடுத்துவதுடன் புதிய அரசியலமைப்பு விடயத்திற்கும் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்  இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

இதற்காக  இம் மாதம் இரண்டாம் வாரத்தில்  இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூடி ஒழுக்காற்று நடவடிக்கைகாக ஒழுக்காற்று குழுவையும் கூட்டபடவுள்ளது .

உள்ளுராட்சிமன்ற தேர்தலில்

இலங்கை தமிழரசுகட்சியினுடைய மத்திய குழு சிபாரிசை செய்திருந்தது அந்த சிபாரிசின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வகிக்கின்ற கட்சிகள் ஒவ்வொருவரும் தனித்தனியாக  தேர்தலிலே போட்டியிடுவதன் மூலம் வட்டார அடிப்படையிலே வருகின்ற கட்சிகளும் அதைவிட விகிதாசார அடிப்படையில் ஏனைய கட்சிகளும் பெறுகின்ற எஞ்சிய வாக்குகளால்  வருகின்ற அந்த பிரதிநிதித்துவத்தையும் நாங்கள் எல்லோரும் ஒன்றாகப் பெறலாம்  வடக்கு கிழக்கு  மாகாணங்களில்  பெரும்பான்மையினை நாங்கள் பெற்று ஆட்சி அமைக்கலாம் என்று ஒரு புதிய அணுகுமுறையை செயல்படுத்தி இந்த முறை தேர்தலில் களமிறங்குவோம் என கலந்து பேசினோம் அந்த தீர்மானத்தை இறுதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பிலே அங்கம் வைக்கின்ற கட்சிகள் அதில் அதிகம் விருப்பம் இல்லாமல் இருந்தார்கள்  எனினும் தமிழரசு கட்சி தன்னுடைய செயற்குழுவில் சிபார்சு செய்தது

அதற்கு அமையவே தனித்து போட்டியிடுகின்றோம் எனினும்

கட்சியின் மூத்த உறுப்பினர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள்  ஏனைய கட்சிகளை விமர்சித்தல் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றன அந்த வகையில் தமிழரசு கட்சியின்  தலைவர் என்ற ரீதியில் நான்  நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்துகின்றார்கள் பல முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளது

குறிப்பாக சுமந்திரன்,  தவராசா ஆகியோரின் அறிக்கையின்  அடிப்படையிலும்  மிகவும் அதிருப்தி அடைந்த மக்கள் அவர்களுடைய பிரதிநிதிகள் கட்சி பிரதிநிதிகள் என்னிடம்விடுத்த கோரிக்கையை அடுத்து இம்மாதம் இரண்டாம் வாரத்தில் மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்பட்டு கட்சி பிளவுபடுத்தக்கூடிய வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்தவர்கள் பிரச்சார மேடைகளில் ஏனைய கட்சிகளை  விமர்சித்தவர்கள்  எந்த பொறுப்பில் இருந்தாலும்   அவர்களுக்குரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானித்திருக்கின்றேன்

இதற்காக கட்சியின் மத்திய செயற்குழுவை கூட்டி நடவடிக்கை எடுக்கவுள்ளோம் .

எங்கள் மக்களுடைய ஒற்றுமை ஒற்றுமையான அரசியல் தீர்மானத்தை முன்வைத்து பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் நடத்தி இனப் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கு இவ்வாறான  சக்திகள் கட்சியில் இருந்தால் என்ன வெளியில் இருந்தால் என்ன இதற்கு  இடமளிக்கக்கூடாது என்பதற்காக மிக பொருத்தமான வகையில் தமிழரசு கட்சியினுடைய மத்திய செயற்குழு இந்த விடயங்களை ஆராய்ந்து அதற்கு பொருத்தமான வகையில்  ஒழுங்கு விதியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.