அமெரிக்காவில் சுற்றுலா விசாவுக்கு விண்ணப்பித்த போல்சனாரோ – பின்னணி என்ன?

76 0

பிரேசிலின் முன்னாள் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஆறு மாத கால அமெரிக்க சுற்றுலா விசாவிற்கு விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரேசிலில் அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிபர் போல்சனரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால், வாக்கு வித்தியாசம் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், ஜனவரி 8-ஆம் தேதி அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றம் மற்றம் உச்ச நீதிமன்றத்தின் கட்டிடங்களில் நுழைந்து அங்கு சேதம் விளைவித்தனர். இதனையடுத்து அந்தப் பகுதியே போர்க்களமாக காட்சியளித்தது. இதனையடுத்து, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை போலீஸார் அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும்,

கலவரத்தை தூண்டியதாக போல்சனேரோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு பிரேசில் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்த போல்சனேரோ அமெரிக்காவுக்குச் சென்றார்.

இந்த நிலையில், தற்போது ஆறு மாத காலம் அமெரிக்காவில் சுற்றுலா விசாவிற்கு போல்சனாரோ விண்ணப்பித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து போல்சனோரா வழக்கறிஞர் அலெக்ஸ்ஸாண்ட்ரா கூறும்போது, “முன்னாள் அதிபர் தனது வாழ்நாளில் 34 ஆண்டுகளை பொது சேவைக்காக அர்ப்பணித்துள்ளார். அவர் சிறிது ஓய்வு எடுக்க விரும்புகிறார்” என்று தெரிவித்துள்ளார்.