26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக உள்வாங்குவதற்கு இணையம் மூலம் விண்ணப்பங்கள் கோரல்

73 0

அரச சேவையில் உள்ள 26,000 பட்டதாரிகளை ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு கோரியுள்ளது.

2018, 2019, 2020 ஆகிய காலப் பகுதிகளில்  அரச சேவையில் இணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட 40 வயதுக்கு உட்பட்ட பட்டதாரிகளிடமிருந்து  இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெறும்  விண்ணப்பங்களின் எண்ணிக்கையை  கவனத்தில் கொண்டு எதிர்வரும் மார்ச் மாதம் நாடளாவிய ரீதியில் இந்த ஆட்சேர்ப்பு பரீட்சை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாகாண பாடசாலைகளுக்கு மாகாண மட்டத்திலும் மற்றும்  தேசிய  மட்டத்திலும் நேர்முகத்தேர்வு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த பட்டதாரிகள் மூன்று வருட  சேவைக் காலத்தின் பின்னர் ஆசிரியர்களாக ஆசிரிய சேவையில் உள்வாங்கப்பட்டு 5 வருடங்கள் சேவை செய்வதற்கு விருப்பமான மாகாணத்தைத் தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்வுள்ளது.

அனைத்து விண்ணப்பங்களையும்  எதிர்வரும்  பெப்ரவரி 10 க்கு முன் இணையம் மூலம்  சமர்ப்பிக்கலாம்.

இணைய முகவரி  http://applicationsdoenets.lk/exams