மஹரகம மேயரின் வாகனத்தை சேதப்படுத்திய நபர்

78 0

மஹரகம மேயர் திராஜ் லக்ருவன் பியரத்னவின் உத்தியோகபூர்வ கெப் வண்டியின் டயர்களை கூரிய ஆயுதத்தால் குத்தி பாரிய சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் பணி ஆய்வாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என மஹரகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மஹரகம மாநகர சபையின் தலைமை அலுவலகத்தில் மேயரின் வண்டி நிறுத்தப்பட்டிருந்த வேளையில் குறித்த நபர் வண்டியை அடித்து நொறுக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால், வண்டியின் நான்கு சக்கரங்களும் சேதமடைந்துள்ளன.

மேயருடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து குறித்த சந்தேகநபர் இச்சம்பவத்தை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய நபர் நுகேகொட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மேலும், நுகேகொடை குற்றவியல் ஆய்வக அதிகாரிகள் வந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.