மாத்தளை – லக்கல – களுகங்கை வேலைத் திட்டத்தில், அகழ்வுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில், சிக்குண்ட நபர் மீட்கப்பட்டுள்ளார்.
முன்னதாக இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் சிறு காயங்களுக்கு இலக்காகிய நிலையில் காப்பாற்றப்பட்டார்.இந்தநிலையில், மற்றுமொருவர் மண் மேட்டினுள் சிக்கியிருந்ததோடு அவரை மீட்கும் பணிகள் தீவிரமான முன்னெடுக்கப்பட்டு வந்தன. இதற்கமைய அவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.

