புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களினால் ‘கறுப்பு வாரம்’


அரசாங்கத்தின் புதிய வரி அறவீட்டு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘கறுப்பு வாரம்’ இற்கு ஆதரவு தெரிவித்து மத்திய வங்கி, அரச மற்றும் தனியார் வங்கிகள், துறைமுகம் ஆகிய பிரிவுகளில் ஊழியர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் என பலரும் இன்று (26) கொழும்பு, அநுராதபுரம், புத்தளம், நுவரெலியா உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதில் கொழும்பு கோட்டையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது எடுக்கப்பட்ட படங்களை காணலாம்.

