சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ஜீப்புடன் ஒருவர் கைது

180 0

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ஜீப்புடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டு போலி பதிவு இலக்கத்துடன் பயன்படுத்தப்பட்ட சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான சொகுசு ஜீப்புடன் நபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிலியந்தலை பொகுந்தர பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் வைத்து ஜீப்புடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பாணந்துறை வலன மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.

பாணந்துறை வலன மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப் பின் போது ஜீப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேக நபரிடம் இருந்து பல போலி ஆவணங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.