முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்ய சதி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக சில்வாவின் முழு சம்பளத்தையும் வழங்குவது தொடர்பில் ஆராயுமாறு பொலிஸ் மா அதிபருக்கு அறிவிக்குமாறு உயர் நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு இன்று (25) உத்தரவிட்டுள்ளது.
கட்டாய விடுமுறையை அனுப்புவதற்கு எதிராக நாலக சில்வா தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே உயர் நீதிமன்றம் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளது.
பிரியந்த ஜயவர்தன, எஸ்.துரைராஜா மற்றும் குமுதுனி விக்கிரமசிங்க ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இந்த அடிப்படை உரிமை மனு பரிசீலிக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

