மருந்து தட்டுப்பாடு தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் முறைப்பாடு செய்ய நடவடிக்கை

269 0

கறுப்பு வாரமாக திங்கட்கிழமை(23) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையில்பிரகனபடுத்தியுள்ளோம்.மருந்து தட்டுப்பாடு மற்றும் அரசாங்கத்தின் வரிக்கொள்கை தொடர்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்து தட்டுப்பாடு, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு ,அரசாங்கத்தின் தன்னிச்சையான வரிக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்பாக மகஜர்  ஒன்றில் கையொப்பம்  திரட்டினர்

மேலும் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு காண்பதற்கு தாம் முன் நிற்பதாகவும் நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாம் வைத்தியசாலைகளில் உள்ள வாட்களுக்கு சென்றாலும் அல்லது வெளிநோயாளர் பிரிவுகளுக்கு சென்றாலும் மட்டுமின்றி வைத்தியசாலைகளில் எங்கு சென்றாலும் எமக்கு நோயளர்களின் கண்ணீரையே காணக்கூடியதாக இருக்கிறது. வைத்தியர்களாக எமக்கு செய்ய முடிந்தது எமது கண்ணீரையும்அவர்களுடன் பகிர்ந்து  கொள்வது மாத்திரமே.

தேசிய வைத்தியசாலையில் வாட்களில் மருந்து தட்டுப்பாடு நிலவுகிறது. குறைந்தது நீரிழிவுக்கான இன்சுலின் மருந்துகளைக்  கூட பெற்றுக்கொள்ள முடியாத அளவிற்கு கொழும்பு தேசிய வைத்தியசாலை காணப்படுகின்றது.

நாங்கள் முல்லைத்தீவு வைத்தியசாலையை பற்றியோ  அல்லது கிளிநொச்சி வைத்தியசாலை பற்றியோ பேச வில்லை. தேசிய வைத்தியசாலையின் நிலைப்பற்றி யே பேசு கின்றோம்.

மருந்து தட்டுப்பாடு தொடர்பாக 10 யோசனைகளை முன்வைத்தோம். 6 மாதங்கள் கடந்தும்  இது தொடர்பில் அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை.

இந்த நிலை தொடர்ச்சியாக நிலவுமாக காணப்பட்டால் மருத்துவ அதிகாரிகள் சங்கம் என்ற வகையில் சர்வதேசத்திற்கு கொண்டு செல்லவுள்ளோம். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்திடம் முறைப்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.