யாழில் வாகன விபத்து: ஒருவர் படுகாயம்

218 0

யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்த விபத்து சம்பவம் இன்றைய தினம் (23.01.2023) இடம்பெற்றுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்றே மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் படுகாயமைந்துள்ளார்.

இதனையடுத்து அவர் உடனடியாக மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.