ஜா-எல, பற்றைப் பிரதேசமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டி56 துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போதே இந்த துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

