ஜனவரியில் 20 கொலை சம்பவங்கள் பதிவு

199 0

2023 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் கடந்த 18 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கூரிய ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் சம்பவங்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்த 20 பேரில் இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இதேவேளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் 30 ஆம் திகதி வரையான காலத்தில் நாடு முழுவதும் 516 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும், அவற்றில் 458 சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு கூறியுள்ளது.