வவுனியாவில் இன்று 8 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனு தாக்கல்

172 0

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இன்று (ஜன 21) காலை தொடக்கம் மதியம் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் 8 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தன.

அதன் அடிப்படையில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஐக்கிய மக்கள் சக்தி , தமிழரசுக்கட்சி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி , ஐக்கிய மக்கள் கட்சி , ஐக்கிய தேசிய கட்சி , புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ,  சுயேட்சைக் குழுக்கள் 3 என 8 கட்சிகளும் 3 சுயேட்சை குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தன.

மேலும் அசம்பாவிதங்கள் எவையும் இடம்பெறாத வண்ணம் வவுனியா மாவட்ட செயலகத்தினை சுற்றியுள்ள பகுதிகளில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன.