இலங்கைத் தமிழரசுக் கட்சி
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை இலங்கைத் தமிழரசுக் கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
இன்று காலை 10 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம் உள்ளிட்டவர்கள் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஐக்கிய தேசிய கட்சி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
இன்று காலை 9 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களுக்கும் ஐக்கிய தேசிய கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்தது.
இதன்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழுவினர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய மக்கள் சக்தி யாழில் வேட்புமனு தாக்கல்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
எதிர்க்கட்சித் தலைவரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளருமான (தமிழ்) உமாச்சந்திரா பிரகாஷ் தலைமையிலான குழுவினர் வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.
தமிழ் மக்கள் கூட்டணி யாழில் வேட்புமனு தாக்கல்!
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தது.
இன்று காலை 11 மணியளவில் யாழ்.மாவட்ட செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 12உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தமிழ் மக்கள் கூட்டணி வேட்புமனுவை தாக்கல் செய்தது.
இதன்போது முன்னாள் யாழ் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையிலான குழுவினர் பிரசன்னமாகியிருந்தனர்.
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் வேட்புமனு தாக்கல் செய்தது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழில் வேட்புமனு தாக்கல்!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கா வேட்புமனுவை இன்றையதினம் தாக்கல் செய்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிடுவதற்காக வேட்புமனு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நல்லூரில் களம் இறங்கும் முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன்!
நல்லூரில் பிரதேச சபையில் போட்டியிடுவதற்காக முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் பிரதேச சபைக்கு மாத்திரம் சுயேச்சை குழுவில் களம் இறங்குவதாக பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
சுயேட்சை குழு
தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் சுயேட்சை குழுவில் களம் இறங்குகிறார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவை தியாகி அறக்கொடை நிதியத்தின் தலைவர் வாமதேவ தியாகேந்திரன் தலைமையிலான சுயேச்சை குழுவினர் இன்று யாழ்ப்பாணத்தில் தாக்கல் செய்தனர்.
யாழ்ப்பாண மாநகர சபையில் மாத்தாரம் போட்டியிடுவதற்காக வாமதேவ தியாகேந்திரன் தலைமையிலான சுயேச்சை குழுவினர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி யாழ்ப்பாணத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தது.
யாழ்ப்பாணத்தில் உள்ள மூன்று உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிடுவதற்காக புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளது.

