இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது குறித்து தலாய்லாமா சிந்திக்கவில்லை – திபெத் அதிகாரி

79 0

திபெத் ஆன்மீக தலைவர் தலாய்லாமாவிற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான எண்ணம் எதுவுமில்லை என திபெத் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அழைப்பு விடுத்துள்ள போதிலும் தலாய்லாமாவிற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான எண்ணமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் பிஹாரில் இடம்பெற்ற பாலிமாநாட்டில் கலந்துகொண்ட இலங்கை பௌத்தமதகுருமார் திபெத்தின் ஆன்மீக தலைவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

திபெத்தின் ஆன்மீக தலைவரை இலங்கை பௌத்தமதகுருமார் குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர் ஆனால் அவர் அது குறித்து எதனையும் தெரிவிக்கவில்லைஎன  திபெத் அதிகாரியொருவர் இந்திய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.