கொழும்பில் ஐ.தே.க. கட்டுப்பணம் செலுத்தியது

81 0

ள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசிய கட்சி கொழும்பு மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக கட்டுப்பணம் செலுத்தியது.

கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ரத்னாயக்கவினால் கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (19) காலை கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன, பொது செயலாளர் ரங்கே பண்டார, கொழும்பு மாநகர சபை மேயர் ரோசி சேனாநாயக்க, ஐக்கிய தேசிய கட்சி முகாமையாளர் லசன்த குணவர்த்தன உட்பட கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.